மாயமான நெல்லை கிழக்குமாவட்ட காங்கிரஸ் தலைவர் எரிந்தநிலையில் பிணமாக மீட்பு

Congress
Spread the love

நெல்லை கிழக்குமாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்தவர் ஜெயக்குமார். இவர் கடந்த 30 ந்தேதி இரவு 7.45 மணியளவில் வீட்டில் இருந்து வெளியே சென்றார். பின்னர் திரும்பி வரவில்லை. குடும்பத்தினர் பல்வேற இடங்களில் தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லை.

மாயம்

இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உவரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். ஜெயக்குமாரின் மகன் கருத்தையா ஜாப்ரின் அளித்த புகாரில் தனது தந்தையை கடந்த 2 நாட்களாக காணவில்லை என்று தெரிவித்து இருந்தார்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். காங்கிரஸ் தலைவர் மாயமான சம்பவம் அப்பகுதியில் பரபரப்ப¬ ஏற்படுத்தி இருந்தது.

எரிந்தநிலையில் பிணமாக மீட்பு

இந்த நிலையில் இன்று காலை(4 ந்தேதி) கரைசுத்து புதூர் அருகே உள்ள தோட்டத்தில் ஜெயக்குமார் பிணமாக கிடந்தார். அவரது உடல் எரிக்கப்பட்ட நிலையில் கிடந்தது. தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் எப்படி இறந்தார் என்பது மர்மமாக உள்ளது.

மர்ம நபர்கள் மிரட்டல்

ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு இறந்து போன ஜெயக்குமார் தனக்கு மிரட்டல் வருவதாகவும், மர்ம நபர்கள் நோட்டமிடுவதாகவும் போலீஸ்சூப்பிரண்டு சிலம்பரசனிடம் ஒரு புகார் மனு அளித்து இருந்தார். எனவே முன்விரோதத்தில் மர்ம நபர்கள் ஜெயக்குமாரை கடத்தி கொன்று உடலை எரித்து இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஜெயக்குமார் புகார்கொடுத்த உடனேயே உரிய விசாரணை நடத்தி மர்ம நபர்களை பிடித்து இருந்தால் கொலையை தடுத்துஇருக்க முடியும் என்று காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டினர்.
மாயமான நெல்லை கிழக்குமாவட்ட காங்கிரஸ் தலைவர் எரிந்தநிலையில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் காங்கிரஸ் கட்சியினரிடையேயும், அப்பகுதி மக்களிடையேயும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *