லோகேஷ் கனகராஜ் பேசுகையில், “எனக்கு ‘மாநகரம்’ பட சமயத்திலிருந்து ரஞ்சித் அண்ணாவைத் தெரியும். அவருடைய செயல்களில் என்னுடைய பங்களிப்பும் இருக்கணும்னு ஆசைப்படுறேன்.
மாற்றங்கள் நம்மிடம் இருந்துதான் பிறக்கும். நான் சிந்திச்சு செயல்பட்டாலே போதும்னு நான் நினைக்கிறேன். ‘கூலி’ படத்தை முடிச்சதுக்குப் பிறகு என்னுடைய பேட்டிகள் எதுவும் வரவில்லை.
காரணம் அப்போது என்னுடைய அடுத்த பட வேலைகளில் இறங்கிவிட்டேன். எனக்கும் மக்களுக்கு நன்றி தெரிவிக்க சரியான மேடை கிடைக்கல.

‘கூலி’ படத்தின் மீது ஆயிரம் விமர்சனங்கள் வந்தன. மக்களுக்குப் படத்தைக் கொடுக்கும்போது அவங்க கொடுக்கிற விமர்சனத்தை ஏத்துக்கணும்.
நானும் அந்த விமர்சனங்களை ஏத்துக்கிட்டு, அடுத்து வர்ற என்னுடைய படங்களில் அதைத் தவிர்க்க முயற்சி பண்ணுவேன்.
விமர்சனங்களைத் தாண்டி ரஜினி சாருக்காகவும், இப்படியான ஒரு படத்துக்காகவும் மக்கள் தியேட்டரில் போய் படத்தைப் பார்த்தாங்க. அந்தப் படம் 500 கோடி சம்பாதித்து இருப்பதாக தயாரிப்பாளர் சொன்னாங்க. இவை அத்தனைக்கும் காரணம் மக்களுடைய சப்போர்ட்தான்! அதுக்கு நன்றி!” எனப் பேசினார்.