இயக்குநர் பா. ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் நடத்தும் “மார்கழியில் மக்களிசை’ நிகழ்வு நேற்றைய தினம் தொடங்கியது.
6வது முறையாகத் தொடர்ந்து நடைபெறும் இந்த நிகழ்வை கனிமொழி எம்.பி., இயக்குநர்கள் வெற்றி மாறன், லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் ஆகியோர் பறையடித்துத் தொடங்கி வைத்தனர்.

இந்த நிகழ்வைத் தொடங்கி வைத்த பிறகு நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி இந்த நிகழ்வுக் குறித்துப் பேசினார்.