பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மாசி மாதத்தின் முகூர்த்த தினமான வரும் 10ம் தேதி அன்று கூடுதல் டோக்கன்கள் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடா்பாக தமிழக அரசின் பதிவுத் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பு: சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்வது வழக்கம்.
தற்போது மாசி மாதத்தின் மங்களகரமான தினமான 10.03.2025 அன்று அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யுமாறு பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன.