ரம்ஜான் பண்டிகையையொட்டி மார்ச் 28-ல் தாம்பரம் – கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி இந்த ரயில் மார்ச் 28ஆம் தேதி மாலை 6 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 08.00 மணிக்கு கன்னியாகுமரி சென்றடைகிறது.