எந்தப் பக்கம் திரும்பினாலும் “மாற்று எரிபொருளுக்கான தேவை’ குறித்துதான் விவாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. இந்த நேரத்தில் இந்தத் திசையில் தனது பயணத்தைத் தொடர்ந்துகொண்டிருக்கும் Blue Energy Motors-ன் தலைமை மார்க்கெட்டிங் ஆபீஸர் ஜெயேஷ் ஷேலார் உடன், இது குறித்து உரையாடினோம்.
“இந்தியாவின் தளவாட (logistics) துறை வேகமாக வளர்ந்துகொண்டிருக்கிறது. அதற்கு ஏற்ப, சரக்குப் போக்குவரத்துக்குப் பயன்படுத்தும் எரிபொருளும் மாறிக்கொண்டிருக்கிறது.
இந்த உண்மையை உணர்ந்ததிலிருந்துதான் எங்கள் நிறுவனத்தின் கனவு தொடங்கியது. 2020-ல் நிறுவனத்தைத் தொடங்கியபோது, இந்தியாவின் சரக்குப் போக்குவரத்தின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு ஏற்ற கனரக வாகனங்களை உருவாக்கும் வாய்ப்பு இருப்பதை உணர்ந்தோம்.

நாட்டின் பெரும்பாலான சரக்குகளைச் சாலை வழியே கொண்டு செல்கிறோம். தொழில்கள், சப்ளை சங்கிலிகள், வணிக நிறுவனங்கள் என அனைத்தும் இயங்குவதற்கும் கனரகச் சரக்கு வாகனங்களே முதுகெலும்பு. செயல்திறன், நம்பகத்தன்மை, சுத்தமான எரிசக்தி, இந்த மூன்றையும் fleet operators-க்கு நடைமுறையில் பயனுள்ளதாக ஒன்றிணைப்பதே எங்கள் நோக்கம்.
எந்த வாகனமும் இந்தத் துறையில் வெற்றிபெற வேண்டும் என்றால் சுமைத் திறன், தூர வரம்பு (range), இயக்கச் செலவு. இந்த அடிப்படைகளில் சமரசம் இருக்கக் கூடாது. அதனால்தான் நாங்கள் மாற்று எரிபொருள் கனரக வாகனங்களை வலுவான பொறியியல் தேர்ச்சியோடும் உலகத் தரமான தொழில்நுட்பக் கூட்டாண்மையோடும் உருவாக்கி வருகிறோம்.
இந்தியாவின் சரக்குப் போக்குவரத்து முறை மேலும் திறனுள்ளதாகவும் எதிர்காலத்துக்குத் தயாராகவும் மாறும் என்பதில் நாங்கள் பங்காற்ற விரும்புகிறோம்.