திமுக – காங்கிரஸ் கூட்டணியில் தொடர் இழுபறி நிலவி வரும் நிலையில் காங்கிரஸின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் முதல்வர் ஸ்டாலினை சந்திக்கவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
திமுக – காங்கிரஸ் கூட்டணி இடையே தொடர் இழுபறி நிலவி வருகிறது. பிப்ரவரி 28 ஆம் தேதி இருதரப்பும் முதற்கட்ட பேச்சுவார்த்தையை முடித்திருந்தனர். அதிக சீட்டுகள் வேண்டும் என்பதில் காங்கிரஸ் விடாப்பிடியாக இருப்பதால் இருதரப்புக்கும் இடையே சுமுகமான தீர்வு எட்டப்படவில்லை.
திமுக கொடுக்கும் 25 இடங்களையெல்லாம் வாங்கிக் கொள்ள முடியாது என கிரிஷ் சோடங்கர் டெல்லியில் வெளிப்படையாக பேட்டி கொடுத்திருந்தார். இந்நிலையில், மார்ச் 3 ஆம் தேதி மாலைக்குள் கூட்டணி குறித்து ஒரு முடிவை தெரிவிக்குமாறு திமுக தரப்பு காங்கிரஸிடம் கறாராக கூறியிருந்தது.