இன்று(அக். 15) மாலை 4 மணி வரை சென்னை உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் வலுப்பெற்றுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக, தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது.
இதையும் படிக்க: சென்னையில் மேலும் 3 மணி நேரம் கனமழை! நாளை அதி கனமழை பெய்யும்!! – பிரதீப் ஜான்
இந்த நிலையில் அடுத்த 2 மணி நேரத்துக்கு(மாலை 4 மணி வரை) செங்கல்பட்டு, சென்னை, கடலூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இடி மின்னலுடன் கூடிய அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அரியலூர், கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம், புதுக்கோட்டை, பெரம்பலூர், தஞ்சாவூர், திருச்சி, திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தேனி மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.