கன்னட திரைப்படங்கள்
Bank of Bhagyalakshmi
ஆக்ஷன் த்ரில்லர் கதை கொண்ட இத்திரைப்படத்தில் நடிகர்கள் தீக்ஷித் ஷெட்டி மற்றும் பிருந்தா ஆச்சாரியா நடித்துள்ளனர். இத்திரைப்படம் நேற்று (நவம்பர் 21) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது .
Radheyaa
நடிகர்கள் அஜய் ராவ், சோனல், தன்யா பாலகிருஷ்ணன் ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள க்ரைம் த்ரில்லர் திரைப்படமான இது, நேற்று (நவம்பர் 21) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது .
Full Meals
லிக்கித் ஷெட்டி , குஷி ரவி, தேஜஸ்வினி ஷர்மா ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள ரொமான்டிக் திரைப்படம், இது நேற்று (நவம்பர் 21) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
Maarutha
துனியா விஜய், ஷ்ரேயாஸ் மஞ்சு, ரவிச்சந்திரன் ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமான இது, நேற்று (நவம்பர் 21) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

இந்தி திரைப்படங்கள்
120 Bahadur
நடிகர்கள் ஃபாரான் அக்தர், ராஷி கண்ணா ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 120 பகதூர். மிலிட்டரி பின்னணியில் உருவாகியுள்ள இத்திரைப்படம் நேற்று (நவம்பர் 21) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
Haunted-Ghosts of the Past 3D
காமெடி ஹாரர் திரைப்படமான இதில் நடிகர்கள் கௌரவ் பாஜ்பாய், மஹாக்ஷய் சக்ரபோர்ட்டி, ஷ்ருதி பிரகாஷ் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் நேற்று (நவம்பர் 21) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது .
Mastiii 4
மஸ்தி திரைப்படங்கள் வரிசையில் உருவாகியுள்ள மற்றுமொரு திரைப்படமான இதில் ரித்தேஷ் தேஷ்முக், விவேக் ஓபராய், அஃப்தப் ஷிவ்தாஸ்னி ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் நேற்று (நவம்பர் 21) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.