தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா.
இவர் இயக்குநர் ராகுல் ரவீந்திரன் இயக்கத்தில் ‘தி கேர்ள் பிரண்ட்’ என்ற படத்தில் நடித்திருந்தார்.
இவருடன் நடிகர் தீக்சித் ஷெட்டி கதாநாயகனாகவும், அனு இம்மானுவேல் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார்.

பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருந்தது.
இந்நிலையில் தெலுங்கானா மாநில அரசின் ‘Gaddar’ திரைப்பட விருதுகள் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நேற்று (மார்ச்.19) நடந்தது.
இதில் ‘தி கேர்ள் ஃபிரெண்ட்’ படத்துக்காக சிறந்த நடிகைக்கான விருதை நடிகை ராஷ்மிகா மந்தனா பெற்றார்.