நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் 2025-ம் ஆண்டின் இறுதியில் திரையரங்குகளில் வெளியான படம் சிறை. அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் நடிகர்கள் எல்.கே. அக்ஷய் குமார் நடிப்பில் திரைக்கு வந்த இந்தத் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகும் வெற்றிப் படமானது.
குறைந்த பட்ஜெட் படங்களால் பெரிய வசூல் சாதனை படைக்க முடியுமா என்ற கேள்விக்கு உறுதியான பதிலாக அமைந்த இந்தப் படம், பிரமாண்ட விளம்பரங்களும், மாஸ் ஓபனிங் கூட்டங்களும் இல்லாமல் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி நடை போட்டு வருகிறது.
காதல் கதைக்குப் பின், காவல்துறை அதிகார பின்னணியை மையமாக வைத்து வெளியான இந்தப் படம், ஜனவரி 23 அன்று ஜீ5 ஓடிடியில் வெளியாகி, அங்கும் தன் முத்திரையைப் பதித்து வருகிறது.
இந்த நிலையில்,புகழ்பெற்ற முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், வர்ணனையாளரும், கிரிக்கெட் பயிற்சியாளருமான தினேஷ் கார்த்திக் சிறைப் படம் பார்த்த தன் அனுபவம் குறித்து எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.