மிகவும் க்யூட், கடினமான நடனம்..! ரசிகையின் ரீல்ஸுக்கு குஷி பட நினைவுகளைப் பகிர்ந்த ஜோதிகா!

Dinamani2f2025 03 142fqrqpev6q2fjoo.jpg
Spread the love

நடிகை ஜோதிகா இன்ஸ்டாகிராமில் ரசிகையின் ரீல்ஸில் பழைய நினைவுகளை கமெண்ட் செய்துள்ளார்.

தமிழில் அறிமுகமான ஜோதிகா சூர்யாவை திருமணம் செய்தபிறகு குறைவாகவே நடித்து வந்தார்.

தற்போது மீண்டும் முழு வீச்சில் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். உடற்பயிற்சியிலும் அசத்தி வரும் ஜோதிகா ஹிந்தியில் பல படங்களில் நடித்து வருகிறார்.

கடைசியாக அவர் நடித்த சைத்தான் படம் ரூ.100 கோடி வசூலித்தது. சமீபத்தில் டப்பா கார்டெல் என்ற தொடர் நெட்பிளிக்ஸில் வெளியாகியுள்ளது.

யார் இந்த ஷாலினி?

இன்ஸ்டாகிராமில் செல்ஃபி ஷாலு எனும் ஷாலினியின் ரீல்ஸில் கமெண்ட் செய்துள்ளார். அமெரிக்காவில் வாழும் தமிழ்ப் பெண் ஷாலினி நடிகை ஜோதிகாவின் தீவிர ரசிகைகயாக அறியப்படுகிறார்.

பல விடியோக்களில் நடிகை ஜோதிகா மாதிரியே ஒப்பனை செய்தும் ஆடைகளை உடுத்தியும் அதேபோல் க்யூட்டாக நடனம் ஆடியுள்ளார்.

ஷாலினி.

ஷாலியின் ரசிகர்கள் பலரும் அவரை “குட்டி ஜோதிகா” எனும் அளவுக்கு புகழ்கிறார்கள்.

சமீபத்தில் சென்னையில் நாடகக் குழுவில் சிறப்பாக நடித்திருந்தார். இயக்குநர்கள் சமுத்திரக்கனி, சேரன் பாராட்டி பேசினார்கள்.

குஷி பட நினைவுகளைப் பகிர்ந்த ஜோ

இந்நிலையில் ஷாலினியின் குஷி பட ரீல்ஸுக்கு ஜோதிகா கமெண்டில் கூறியதாவது:

ஹாய் ஷாலினி, நீங்கள் மிகவும் போற்றுதலுக்குரியவராக இருக்கிறீர்கள். உங்களது ரீல்ஸ் எனக்கு பழைய நினைவுகளை தூண்டியுள்ளது.

இந்த நடனத்தை விரைவாக முடிக்க வேண்டியிருந்தது. ஏனெனில் சூரியன் மறையும் நேரமது. ராஜூ மாஸ்டரின் நடன அசைவுகள் எனக்கு எப்போதுமே கடினம். பாடல்வரிகளும் வேகமாக இருக்கும்! நான் கண்டிப்பாக சொல்கிறேன் நீங்கள் மிக மிக க்யூட் எனக் குறிப்பிட்டுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *