சிறப்பான தருணம்
டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது சிறப்பான தருணம் என இந்திய அணியின் கேப்டன் நிகி பிரசாத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: நாங்கள் அனைவரும் அமைதியாகவும், நிதானமாகவும் செல்பட முயற்சி செய்தோம். எங்களது வேலையை சரியாக செய்தோம். ஆடுகளத்தில் களமிறங்கி எங்களால் என்ன செய்ய முடியும் என்பதை காட்டியுள்ளோம். எங்களுக்கு அனைத்து சிறந்த வசதிகளையும் செய்து கொடுத்த பிசிசிஐ-க்கு மிக்க நன்றி. நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று உயரத்தில் இருக்கிறது. இது மிகவும் சிறப்பான தருணம் என்றார்.