மின்மாற்றி திருட்டு! 25 நாள்களாக இருளில் மூழ்கியுள்ள கிராமம்!

Dinamani2f2025 01 082fry2eqwo12ftransformer.jpg
Spread the love

உத்தரப் பிரதேசத்தின் பதாவுன் மாவட்டத்திலுள்ள சொறாஹா எனும் கிராமத்தில் மின்மாற்றி (டிரான்ஸ்பார்மர்) திருடப்பட்டதால் கடந்த 25 நாள்களாக அந்த கிராமவாசிகள் மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர்.

சொறாஹா கிராமத்தில் நிறுவப்பட்டிருந்த 250 கிலோ வாட் அளவிலான மின்மாற்றியைக் கழற்றிய திருடர்கள் அதிலிருந்து எண்ணெய் மற்றும் முக்கிய பாகங்களையும் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த அம்மாநில மின்சார துறையினர் இந்த விவகாரத்தை விசாரித்து வருவதாகத் தெரிவித்துள்ளது.

இருப்பினும், கடந்த 25 நாள்களாக வேறொரு புதிய மின்மாற்றி நிறுவப்படாமல் அந்த மொத்த கிராமமும் மின்சாரம் இல்லாமல் தவித்து வருகின்றனர். சுமார் 5,000 பேர் வசிக்கும் அந்த மொத்த கிராமமும் மாலை சூரியன் மறைந்த பின்னர் இருளில் மூழ்கும் அவல நிலை அங்கு ஏற்பட்டு உள்ளது.

இதையும் படிக்க: 17 ஆண்டுகளுக்கு முன் கொல்லப்பட்டதாகக் கருதப்பட்ட நபர் உயிருடன் கண்டுபிடிப்பு!

மேலும், அத்தியாவசிய தேவைகளுக்கும் மின்சாரம் இல்லததினால் செல்போன் பயன்படுத்துவதற்குக் கூட அங்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, அப்பகுதி மின்சாரத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், மின்மாற்றி (டிரான்ஸ்பார்மர்) திருடப்பட்டது குறித்து காவல் துறையிடம் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், புதியதொன்று நிறுவ அரசிடம் பரீந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் இன்னும் ஒரிரு நாள்களில் புதிய மின்மாற்றி நிறுவப்பட்டுவிடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்னும் சில நாள்களில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் பொது தேர்வுகள் நடைபெற இருக்கும் சூழலில் அந்த கிராமத்தின் மாணவ மாணவியர் கல்வி கற்பது தடைப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *