மின்வாரியத்தில் வருமான வரி சோதனையா? | Income tax audit at the Electricity Board

1352203.jpg
Spread the love

சென்னை: மின்வாரிய தலைமை அலுவலகத்தில் நேற்று வருமானவரி சோதனை நடைபெற்றதாக வெளியான செய்தி குறித்து, மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து, மின்வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக மின்வாரிய தலைமை அலுவலகத்தில் வருமான வரித்துறை இணை ஆணையர் தலைமையில் இன்று (நேற்று) ஆய்வு செய்தனர். மின்வாரியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு விதமான செலவினங்களில் உரிய வருமான வரி பிடித்தம் (டிடிஎஸ்) தொடர்பாக வழக்கமான சரிபார்ப்பு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது ஒரு வழக்கமான அலுவலக நடைமுறை ஆகும்.

எனவே, மின்வாரிய தலைமை அலுவலகத்தில் எவ்வித வருமான வரி சோதனையும் நடைபெறவில்லை. வருமான வரி சோதனை என்ற செய்தி தவறானது. இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *