மியான்மர் எல்லையில் உள்ள உல்ஃபா(I) முகாம்கள் மீது இந்திய ராணுவம் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதுகுறித்து உல்ஃபா(I) அமைப்பு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட ஒரு செய்திக்குறிப்பில், பல நடமாடும் முகாம்களில் அதிகாலையில் ட்ரோன்கள் மூலம் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. தடைசெய்யப்பட்ட அமைப்பின் மூத்த தலைவர் ஒருவர் தாக்குதல்களில் கொல்லப்பட்டார்.
மேலும் சுமார் 19 பேர் காயமடைந்தனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இதுபோன்ற சம்பவம் நடந்ததாக எந்தத் தகவலும் இல்லை என்று இந்திய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் பிடிஐயிடம் தெரிவித்தார்.