மத்திய அரசின் பல்வேறு துறைகளில் நிரப்பப்பட உள்ள 17,727 குரூப் ‘பி’ மற்றும் ‘சி’ பணியிடங்களுக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே(ஜூலை 24) கடைசி நாள் என்பதால் இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
மத்திய அரசின் வேலைவாய்ப்பு அறிவிப்புக்காக காத்திருந்த பட்டதாரி இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் மத்திய அரசின் பல்வேறு துறைகளில் நிரப்பப்பட உள்ள 17,727 குரூப் ‘பி’ மற்றும் ‘சி’ பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை மத்திய பணியாளர் தேர்வாணையம்(எஸ்எஸ்சி) கடந்த ஜூன் 24 ஆம் தேதி வெளியிட்டிருந்தது. இதற்கு ஆர்வமுள்ள பட்டதாரி இளைஞர்கள் ஜூலை 24 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவித்திருந்தது.
பணி விவரம் குறித்து பார்ப்போம்:
விளம்பர எண்.HQ-C11018/1/2024-C-1
தேர்வு : SSC- Combined Graduate Level Exam – 2024
குரூப் ‘பி’ பதவிகள்
பதவி: Assistant Section Officer, Assistant Section Officer, Assistant Section Officer,Assistant Section Officer, Assistant / Assistant Section Officer,
Inspector, (Central Excise), Inspector (Preventive Officer), Inspector (Examiner), Assistant Enforcement Officer, Sub Inspector CBI, Inspector,
சம்பளம்: மாதம் ரூ. 44,900 – 1,42,400
பதவி: Assistant / Assistant Section Officer, Executive Assistant, Research Assistant, Divisional Accountant, Sub Inspector, Sub-Inspector/ Junior ntelligence Officer, Junior Statistical Officer
சம்பளம்: ஊதியக் குழு -6 இன் படி மாதம் ரூ. 35,400 – 1,12,400
குரூப் “சி” பதவிகள்
பதவி: Inspector of Income Tax, பதவி: Auditor, Accountant, Junior Accountant
சம்பளம்: மாதம் ரூ. 29,200 – 92,300
பதவி: Postal Assistant/ Sorting Assistant, Senior Secretariat Assistant/ Upper Division Clerks, Senior Administrative Assistant, Tax Assistant, Sub-Inspector
சம்பளம்: மாதம் ரூ. 25,500 – 81,100