மீட்கப்பட்ட பெண்: பின்னணியில் லவ் ஜிகாத்? கர்நாடகத்தில் தொடங்கும் சர்ச்சை!

Dinamani2f2024 072fa0fc2fe3 807b 4796 Bb82 Ce7c74ca398a2ftnie Import 2022 9 9 Original Abduction.avif.avif
Spread the love

தக்‌ஷினா கன்னடா மாவட்டத்தில் சமீபத்தில் மீட்கப்பட்ட பெண் இளைஞர் ஒருவருடன் மாயமான நிகழ்வினை லவ் ஜிகாத் என பெண்ணின் பெற்றோரும் விஷ்வ ஹிந்து அமைப்பினரும் தெரிவிக்க கர்நாடகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பெண்ணின் தந்தை மங்களூரு காவல் ஆணையரிடம் புதிய புகார் ஒன்றை அளித்துள்ளார். தனது மகள் கடத்தப்பட்டு இளைஞரால் மதமாற்றம் செய்யப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் இதனை லவ் ஜிகாத் எனத் தெரிவித்துள்ளனர்.

மங்களூருவில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்த பெண் தொடர்பு கொள்ள இயலாத நிலைக்கு சென்றபோது அவரை காணவில்லை என பண்டேஷ்வர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.

காவலர்கள் அந்த பெண்ணை தேடி கண்டுபிடித்தபோது அவர் முகமது அஷ்பக் என்பவருடன் இருந்துள்ளார்.

காவலர்கள் இளைஞரின் பின்னணியை விசாரித்தபோது அவர் ஏற்கெனவே திருமணம் ஆனவர் என்பதும் அவர் மீது கேரளத்தின் காசர்கோடு நகருக்கு அருகிலுள்ள வித்யாநகர் காவல் நிலையத்தில் எட்டு குற்றவியல் வழக்குகள் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

மூத்த விஎச்பி தலைவர் சரண் பம்ப்வெல், கர்நாடகத்தின் கடற்கரை நகரங்களில் லவ் ஜிகாத் அதிகளவில் நடைபெறுவதாகவும் ஹிந்து மக்கள் விழிப்படைய வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

பெண் தானாகவே விருப்பப்பட்டு அந்த இளைஞருடன் சென்றாரா அல்லது வற்புறுத்தப்பட்டாரா என்பதை அறிய காவலர்கள் பெண்ணின் வாக்குமூலம் பெறவுள்ளனர். மேலதிக விவரங்கள் இன்னும் பெறப்படவில்லை.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *