பாஜகவில் இருந்து விலகி மீண்டும் அதிமுகவில் இணைந்தார் முன்னாள் எம்.பி. மைத்ரேயன்.
பாஜக செயற்குழு உறுப்பினரான இருந்த மைத்ரேயன் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.
இது தொடர்பாக அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து நீக்கப்பட்டு, பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்து, அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினராக இருந்து வந்த முன்னாள் எம்.பி. வா. மைத்ரேயன், அக்கட்சியில் இருந்து விலகி, அதிமுக பொதுச் செயலாளர், எடப்பாடி பழனிசாமியை, சென்னை, பசுமைவழிச் சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் இன்று (12.9.2024 வியாழக் கிழமை), நேரில் சந்தித்து, தன்னை மீண்டும் கழகத்தில் இணைத்துக் கொள்ளுமாறு கடிதம் கொடுத்தார்.