நடிகர் தனுஷ் இயக்குநர் வெங்கட் அட்லூரி இயக்கத்தில் நடிக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடிகர் தனுஷ் ராயன் படத்தின் வெற்றிக்குப் பின் குபேரா, இட்லி கடை படங்களில் நடித்து வருகிறார். நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தை இயக்கி முடித்துள்ளார்.
அடுத்ததாக, தனுஷை இயக்க ஆனந்த் எல். ராய், போர் தொழில் இயக்குநர் விக்னேஷ் ராஜா, அமரன் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, மாரி செல்வராஜ், லப்பர் பந்து இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து ஆகியோர் காத்திருக்கின்றனர்.
இதையும் படிக்க: சூர்யா இப்படி செய்திருக்கக் கூடாது: கௌதம் மேனன்!
இந்த நிலையில், வாத்தி, லக்கி பாஸ்கர் படங்களை இயக்கிய இயக்குநர் வெங்கட் அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கவுள்ளதாகப் புதிய தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்திற்கு, ஹானஸ்ட்ராஜ் எனப் பெயரிட்டுள்ளனராம். படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.