எஸ். ஜே. சூர்யா திரைப்படம் ஒன்றை இயக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் மற்றும் நடிகருமான எஸ்.ஜே. சூர்யா மாநாடு திரைப்படத்தின் வெற்றிப் பின் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். தன் தனித்துவமான உடல்மொழியால் தென்னிந்தியளவில் ரசிகர்களை வைத்திருப்பவருக்கு பெரிய வாய்ப்புகள் வருகின்றன.
இறுதியாக, இவர் நடிப்பில் வெளிவந்த சூர்யா சாட்டர்டேவில் நானிக்கு வில்லனாக நடித்து அசத்தியிருந்தார்.
இதையும் படிக்க: நடிப்பிலிருந்து ஓய்வு! பிரபல நடிகர் அறிவிப்பு!
தமிழில், வீர தீர சூரன், எல்ஐகே ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் கேம் சேஞ்சர் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
இந்த நிலையில், வேல்ஸ் பழகலைக்கழகத்தில் எஸ். ஜே. சூர்யாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. அப்போது, கேம் சேஞ்சர் படத்தின் வெளியீட்டிற்குப் பின், புதிய படத்தை இயக்கவுள்ளதாகவும் படத்திற்குக் கில்லர் எனப் பெயரிட்டிருப்பதையும் தெரிவித்துள்ளார்.
இறுதியாக, கடந்த 2015 ஆம் ஆண்டு ’இசை’ படத்தை இயக்கி, நடித்திருந்தார். 10 ஆண்டுகள் கழித்து எஸ். ஜே. சூர்யா மீண்டும் இயக்குநராவது ரசிகர்களிடம் ஆவலை ஏற்படுத்தியுள்ளது.