சர்வதேச சந்தையின் அடிப்படையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நாள்தோறும் மாற்றி அமைக்கப்படுகிறது. அந்த வகையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.320 உயர்ந்து சவரன் ரூ.99,520க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.40 உயர்ந்து கிராம் ரூ.12,440க்கு விற்பனையாகிறது.
சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் ரூ.224க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.2,000 உயர்ந்து கிலோ ரூ.2.24 லட்சத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.
நேற்றைய நிலவரப்படி மீண்டும் தங்கம் விலை உயர்ந்து இருந்தது. நேற்று கிராமுக்கு ரூ.50-ம், சவரனுக்கு ரூ.400-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 400-க்கும், ஒரு சவரன் ரூ.99 ஆயிரத்து 200-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் தங்கம் விலை மீண்டும் ரூ.99 ஆயிரத்தை தாண்டியது.
இன்று தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றின் விலை உயர்ந்து இருப்பது, முதலீட்டாளர்கள், நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
