சச்சின் டெண்டுல்கரின் மகனான 25 வயது இடக்கை வேகப்பந்துவீச்சாளர் அர்ஜுன் டெண்டுல்கருக்கு ஐபிஎல் தொடரில் விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளது. அதுவும் அவரது சொந்த மண்ணான மும்பை இந்தியன்ஸ் அணி ஜெர்சியில்..!
இன்று நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தின் முதல் சுற்றில் அர்ஜுன் டெண்டுல்கரை ஏலத்தில் எடுக்க எந்தவொரு அணியும் முனைப்பு காட்டவில்லை. இதனையடுத்து அவர் விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில், நிகழ்ச்சியில் இடைவெளி விடப்பட்டது. இடைவெளிக்குப் பின், நடைபெற்ற இரண்டாவது சுற்று ஏலத்தில் அர்ஜுன் டெண்டுல்கருக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த அடிப்படைத் தொகையான ரூ. 30 லட்சம் தொகைக்கு அவரை ஏலத்தில் எடுத்துக் கொண்டது மும்பை இந்தியன்ஸ்.
ஏலத்தில் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் விற்பனையாகாமல் போனதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில், இந்த செய்தியால் அவர்களுக்கு ஆறுதல் அளிப்பதாக அமைந்துள்ளது.