இப்போது படங்களில் மிகவும் பிஸியாக இருக்கும் சிவகார்த்திகேயன், அதே வேகத்தை படங்களில் தயாரிப்பிலும் காட்டி வருகிறார்.
தன்னிடம் விஜய் டிவி காலங்களில் நெருக்கமாக பழகிய நண்பர்களுக்கு உதவும் விதமாகவும் அந்தப் படங்கள் அமைகின்றன.
இந்த மாதிரி படங்கள் தயாரிக்கும் போது படத்தின் வெற்றி, தோல்வியைப் பற்றி கவலைப்படாமல் செயல்பட்டு வருகிறார்.
அப்படி அவரது நண்பர் ரியோராஜ் ஹீரோவாக அறிமுகமான படம் தான் “நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’ படம்.
அதற்குப் பிறகுதான் ரியோராஜ் ‘ஜோ’ ‘ஸ்வீட் ஹார்ட்’ மாதிரியான படங்களில் நடித்தார். இப்போது அவர் நடித்து வெளியான ‘ஆண்பாவம் பொல்லாதது’ படம் கவனிக்கத்தக்க வெற்றியையும் ஒரு நல்ல இடத்தையும் ரியோவுக்கு பெற்றுத் தந்தது.
இப்போது ரியோ ராஜ் நடிக்க சிவகார்த்திகேயன் மறுபடியும் ஒரு படத்தை தயாரிக்கப் போகிறார்.