மீண்டும் வெங்கட் பிரபுவுடன் AK 64 படத்தில் இணையும் அஜித்? | Breaking and Live Updates

Spread the love

Last Updated:

அஜித்தின் அடுத்த படமான எகே 64 படத்தின் இயக்குநர் யார் என்ற கேள்வி எழுந்து வந்த நிலையில், தற்போது இயக்குநர் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது..

News18
News18

தமிழ் சினிமாவின் டாப் நடிகராக வளம் வந்து கொண்டிருக்கும் நடிகர் அஜித் ‘‘துணிவு’’ படத்திற்கு பிறகு மகிழ்திருமேனியின் ‘‘விடாமுயற்சி’’ மற்றும் ஆதிக் ரவிச்சந்திரனின் ‘‘Good Bad Ugly’’ என இரண்டு படங்களில் பேக் டு பேக் நடித்துள்ளார். இந்த இரண்டு படங்களின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி இன்னும் வெளியாகவில்லை. உலகளவில் ஏராளமான அஜித் ரசிகர்கள் பலரும் இந்தப் படங்களின் ரிலீசுக்காக காத்திருக்கின்றனர்.

‘‘Good Bad Ugly’’ படப்பிடிப்பு மற்றும் அஜித்தின் கெட்டப் போட்டோக்கள் அடிக்கடி இணையத்தில் வைரலாவது உண்டு. 30 கிலோ எடை குறைந்து அமர்க்களம் பட லுக்கில் அஜித்தின் இளமை பொங்கும் புகைப்படங்கள் சில நாட்களுக்கு முன் வைரலானது குறிப்பிடத்தக்கது. மேலும் அஜித் தற்போது துபாயில் நடக்கப்போகும் கார் பந்தயப் போட்டிக்காக தன்னை தயார்படுத்தி வருகிறார்.

இந்த நிலையில், அஜித்தின் அடுத்த படமான AK 64 படத்தை இயக்கப்போவது யார்? என்பது குறித்த கேள்வி ரசிகர்கள் மத்தியில் பரவி வருகிறது. ‘‘கங்குவா’’ படத்தின் மூலம் படுதோல்வி அடைந்த இயக்குநர் சிவாவுக்கு அஜித் வாய்ப்பு கொடுக்கவுள்ளதாக ஒரு பக்கம் செய்து உலா வருகிறது. அதே சமயம், இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் அஜித் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், அது AK 64 படத்தை குறித்து தான் என்றும் கூறப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *