மீனவர்களை விடுவிக்க கோரி மத்திய அமைச்சருக்கு அண்ணாமலை கடிதம் | Annamalai writes to Union Minister seeking release of fishermen

1349983.jpg
Spread the love

சென்னை: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமநாதபுரம் மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதி உள்ளார்.

இதுகுறித்து அண்ணாமலை எழுதியுள்ள கடிதத்தில், “ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் மற்றும் மண்டபம் பகுதியை சேர்ந்த 10 மீனவர்கள், சில நாட்களுக்கு முன்பு, கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அப்போது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால், அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். மேலும், அவர்களது படகையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.

இந்த மீனவர்களின் வருமானத்தை தான் அவர்களது குடும்பத்தினர் நம்பி உள்ளனர். எனவே, இந்த விவகாரத்தில் தலையிட்டு இலங்கை சிறையில் வாடும் மீனவர்களை, சிறையில் இருந்து விடுவித்து, அவர்கள் தமிழகம் திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *