முகச்சுருக்கம் முதல் சீக்காளி கூந்தல் வரை; முதுமையை விரட்டும் பழம்!

Spread the love

வயோதிகத்தை விரட்டி இளமையைத் தக்க வைக்கும் அற்புதப் பழம் பப்பாளி. எல்லா விதமான சருமத்துக்கும் ஏற்ற பப்பாளியின் பலன்களை சொல்கிறார் அழகுக்கலை நிபுணர் ராஜம் முரளி.

1. சொர சொர முகத்துக்கு…

papaya beauty tips
papaya beauty tips

டீன்-ஏஜில் முகம் முழுக்கப் பருக்கள் ஏற்படும். அவை புண்ணாகி, காய்ந்து போவதால் முகம் சொரசொரப்பாகி, அழகை கெடுக்கும். இதற்கு பப்பாளியில் நிரந்தரத் தீர்வு உண்டு.

மேல்பகுதி கரும்பச்சையாகவும் உள் பகுதி சிவப்பாகவும் உள்ள பப்பாளிப் பழத்தைத் தோலுடன் அரைத்துக் கொள்ளுங்கள். இந்த விழுதை முகத்தில் பூசி வர, முகத்தில் உள்ள பருக்கள் மறையும். சொரசொரப்பும் மாறி, சருமம் மிருதுவாகும்.

2. முகச்சுருக்கத்துக்கு

papaya beauty tips
papaya beauty tips

வயதாவதால் முகத்தில் ஏற்படும் சுருக்கத்தைப் போக்குகிறது பப்பாளி. கனிந்த பப்பாளிப் பழத்தைத் தோலுடன் அரைத்து, முகத்தில் பூசி வந்தால், சுருக்கமும் தொய்வும் ஓடிப் போகும். முகம் எப்போதும் இளமைத் தோற்றத்துடன் வசீகரிக்கும்.

3. வறண்டு கரடு முரடு சருமத்துக்கு

papaya beauty tips
papaya beauty tips

சிலருக்கு சருமம் வறண்டு கரடுமுரடாக இருக்கும். இதற்கும் வைத்தியம் இருக்கிறது பப்பாளியில்..

தோலுடன் அரைத்த முற்றிய பப்பாளி பழத்தின் விழுது – 2 டீஸ்பூன், ‘வைட்டமின் ஈ’ ஆயில் – ஒரு டீஸ்பூன் எடுத்துக் கொள்ளுங்கள். இவை கலக்கும் அளவுக்கு வெள்ளரி விதை பவுடரை சேர்த்து பேஸ்ட் ஆக்குங்கள். இந்த கிரீமை முகம், கழுத்துப் பகுதியில் தேய்த்துக் கழுவுங்கள். ஒரு வாரம் தொடர்ந்து இந்த சிகிச்சையைச் செய்து வர, சருமம் மிருதுவாகி.. முகம் பால் போலாகி விடும்.

4. கருமை படிந்த முகத்துக்கு

papaya beauty tips
papaya beauty tips

வெயிலில் அலைவதால் முகம் கருமை படிந்து டல்லாகத் தெரியும். ஒரு தாமரை இலையுடன் ஒரு பப்பாளி இலையை சேர்த்து அரைத்து, உடலில் வெயில் படும் இடங்களில் தேய்த்துக் கழுவுங்கள். இழந்த நிறத்தை மீட்டு, பொலிவைக் கூட்டும் இந்த இலை பேஸ்ட்!

5. சீக்காளி கூந்தலுக்கு

papaya beauty tips
papaya beauty tips

* கூந்தலின் வறட்சியைப் போக்கி, சீக்காளி கூந்தலுக்கு போஷாக்கு தருகிறது பப்பாளி.

* முற்றிய பப்பாளி இலைகளை தண்ணீரில் போட்டு 5 நிமிடம் கொதிக்க விடுங்கள். இலையை எடுத்து கைகளால் கசக்கினால் நுரை போல வரும். அதை அப்படியே அதே கொதி நீரில் கரைத்து வடிகட்டுங்கள். இந்த நீரில் கூந்தலை அலசுங்கள். வாரம் ஒருமுறை இதைச் செய்து வர, பட்டுப் போல் மென்மையாகும் கூந்தல்.

* பப்பாளி இலைகளுடன் 5 செம்பருத்தி இலைகளை சேர்த்துக் கொதிக்க விட்டும் இதே சிகிச்சையைச் செய்யலாம். இந்த இலைகளுடன் 5 புங்கங்காய்களின் தோலைச் சேர்த்து, கொதிநீரில் போட்டு, எடுத்து, அரைத்து, சீயக்காய்க்கு பதில் தேய்த்துக் குளித்தால், தலை சுத்தமாகும். இது உடலுக்கும் குளிர்ச்சி!

6. பப்பாளி வினிகர்

* ஒரு பப்பாளியை தோலுடன் துருவி, ஒரு பாத்திரத்தில் போட்டு, அது மூழ்கும் அளவுக்கு வினிகரை விட்டு, இறுக மூடி விடுங்கள். 5 வாரம் கழித்துக் கிடைக்கிற பப்பாளி வினிகர் அற்புதமான அழகு மருந்து!

* பப்பாளி வினிகரை பஞ்சால் தொட்டு, முகத்தில் தடவி, 10 நிமிடம் கழித்துக் கழுவுங்கள். அழுக்கெல்லாம் ஓடிப்போய் சருமம் சூப்பர் சுத்தமாகி விடும். வாரம் இருமுறை இந்த சிகிச்சையைச் செய்யலாம்.

* ஒரு டீஸ்பூன் பப்பாளி வினிகர், ஒரு டீஸ்பூன் தேன், ஒரு கற்றாழை ஜெல்.. மூன்றையும் கலந்து, முகத்தில் தடவி, நன்றாக மசாஜ் செய்து கழுவுங்கள். ஃபேஷியல் செய்தது போல முகம் ஜொலிஜொலிக்கும்.

* பப்பாளி துண்டுகள் இரண்டை எடுத்து, விழுதாக அரைத்து, அதில் ஒரு டீஸ்பூன் பப்பாளி வினிகர், ஒரு டீஸ்பூன் தேன் கலந்து முகத்தில் ‘பேக்’ ஆகப் போட்டு 15 நிமிடம் கழித்துக் கழுவுங்கள். ‘ப்ளீச்’ செய்தது போல முகம் பளிச்சிடும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *