முகப்பொலிவிற்காக மாதவிடாய் ரத்தத்தை பயன்படுத்தும் பெண்கள்- எச்சரிக்கும் அழகியல் மருத்துவர் | Women Using Menstrual Blood for Skin Glow: Doctors Issue Strong Warning

Spread the love

சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது சில விசித்திரமான அழகுக்குறிப்புகள் ட்ரெண்ட் ஆவது வழக்கம். அந்த வகையில் தற்போது ஒரு புதிய ட்ரெண்ட் பரவி வருகிறது. “மென்ஸ்ட்ருவல் மாஸ்கிங்’ (Menstrual Masking) என்று அழைக்கப்படும் இந்த முறையில், பெண்கள் தங்கள் மாதவிடாய் ரத்தத்தையே முகத்தில் பூசிக் கொள்கிறார்கள்.

இது சருமத்திற்கு பொலிவை தரும் என்று கருதி இதனை பயன்படுத்துகின்றனர் ஆனால், இதில் மறைந்துள்ள ஆபத்துகள் குறித்து தோல் மருத்துவர் எச்சரித்துள்ளார்.

மென்ஸ்ட்ருவல் மாஸ்கிங்

பெண்கள் தங்களின் மாதவிடாய் காலத்தில் வெளியேறும் ரத்தத்தை சேகரித்து, அதை முகத்தில் ஒரு ‘பேஸ் மாஸ்க்’ போல பூசிக் கொள்வதையே ‘மென்ஸ்ட்ருவல் மாஸ்கிங்’ என்கின்றனர். சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் வரை இந்த ரத்தத்தை முகத்தில் வைத்துவிட்டு, பின்னர் கழுவி விடுகிறார்கள்.

இந்த வினோத பழக்கம் தற்போது இன்ஸ்டாகிராம் மற்றும் டிக்-டாக் போன்ற செயலிகளில் வேகமாக பரவி வருகிறது.

‘மாதவிடாய் ரத்தம் சருமத்தை புத்துணர்ச்சியடையச் செய்யவும், முகப்பொலிவை அதிகரிக்கவும் உதவும்’ என்று இதனை பயன்படுத்துவோர் நம்புகிறார்கள்.

ஆனால் இந்த முறை ஆபத்தானது என்று மருத்துவர்கள் எச்சரிகின்ற்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *