முகமது சிராஜுக்கு துணை காவல் கண்காணிப்பாளர் பதவி!

Dinamani2f2024 10 112ftbt9wt0k2fgzmo9ygwqamyejk.jpg
Spread the love

இந்திய நட்சத்திர கிரிக்கெட் முகமது சிராஜுக்கு துணை காவல் கண்காணிப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் வீரர் முகமது சிராஜ் தெலங்கானாவில் உள்ள காவல்துறை தலைமை இயக்குநரிடம் துணைக் காவல் கண்காணிப்பாளராக அதிகாரபூர்வமாக பொறுப்பேற்றார்.

முகமது சிராஜுக்கு மதிப்புமிக்க குரூப்-1 அரசு பதவி வழங்கப்படும் என்று முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவித்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

2773a8ee 3344 4d7f 94cd 1ce3e7a9af69

டி20 உலகக் கோப்பையில் கோப்பை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்த முகமது சிராஜுக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்திருந்தார்.

முதல்வர் ரேவந்த் ரெட்டி, எதிர்கால திறமைகளை வளர்ப்பதற்காக, விளையாட்டு வீரர்களை ஆதரிப்பதை நோக்கமாக கொண்டுள்ளார்.

இது தவிர, தெலங்கானா அரசு, முகமது சிராஜுக்கு சாலை எண் 78, ஜூப்ளி ஹில்ஸில் 12 செண்ட் நிலத்தையும் ஒதுக்கியுள்ளது.

யார் இந்த முகமது சிராஜ்?

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் மார்ச் 13, 1994 aஅம் ஆண்டில் பிறந்த முகமது சிராஜ், வலது கை வேகப்பந்து வீச்சாளர்.

முகமது சிராஜ் தந்தை ஒரு ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர். சிராஜ் 19 வயதில் கிளப் கிரிக்கெட்டை விளையாடத் தொடங்கினார்.

இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடுகிறார்.

இந்தியாவின் ஆசியக் கோப்பை வெற்றிக்கு முக்கியப் பங்காற்றினார். இறுதிப் போட்டியில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதையும் பெற்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *