உத்தரப் பிரதேசத்தின் ரயில் நிலையத்திலுள்ள முகலாய மன்னரின் சுவரோவியத்தின் மீது இந்து வலதுசாரி அமைப்பினர் கருப்புச் சாயம் பூசியுள்ளனர்.
காசியாபாத் ரயில் நிலையத்தில் வரையப்பட்டிருந்த முகாலாப் பேரரசின் கடைசி மன்னர் பஹதூர் ஷா ஜாஃபரின் சுவரோவியத்தின் மீது இன்று (ஏப்.18) ஹிந்து ராக்ஷா தால் எனும் இந்து வலதுசாரி அமைப்பினர் கருப்பு நிற ஸ்பேர் பெயிண்ட் அடித்து சேதப்படுத்தியுள்ளனர்.
இதுகுறித்து, அடையாளம் தெரியாத நபர்கள் மீது ரயில்வே காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் தாங்கள் சேதப்படுத்தியது முகலாய மன்னரான ஔரங்கசீப்பின் சுவரோவியம் என அந்த வலதுசாரி அமைப்பின் உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.