மைசூரு – தர்பங்கா பயணிகள் விரைவு ரயில்(12578), கவரப்பேட்டை அருகே வெள்ளிக்கிழமை(அக். 11) இரவு விபத்துக்குள்ளானது.
இந்த நிலையில், தடம் புரண்ட ரயில் பெட்டிகளை அப்புறப்படுத்தி, ரயில் பாதையை சீரமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதையொட்டி, முக்கிய ரயில்கள் சில ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், சில ரயில்கள் மாற்று வழித்தடங்களில் இயக்கப்படுவதாகவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதையும் படிக்க: ரயில் விபத்து: மாற்று வழித்தடங்களில் ரயில்கள் இயக்கப்படும் -தெற்கு ரயில்வே
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,
-
இன்று(அக்.12) காலை 7.25 மணிக்கு, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும், சென்னை சென்ட்ரல் – விஜயவாடா ஜன் சதாப்தி விரைவு ரயில்(12077) முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
-
மறுமார்க்கத்தில், இன்று(அக்.12) பகல் 3.30 மணிக்கு விஜயவாடாவிலிருந்து புறப்படும், விஜயவாடா – சென்னை சென்ட்ரல் ஜன் சதாப்தி விரைவு ரயில்(12078) முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி – நிஸாமுதீன் திருக்குறள் எக்ஸ்பிரஸ் (12641) – அக்.11-ஆம் தேதி இரவு 7.10 மணிக்கு கன்னியாகுமரியிலிருந்து புறப்பட்ட இந்த ரயில், சென்னை கடற்கரை, அரக்கோணம், ரேனிகுண்டா வழித்தடத்தில் இயக்கப்படுகிறது.
சென்னை சென் ட்ரல் – லக்னௌ எக்ஸ்பிரஸ் (16093) – அக்.12-ஆம் தேதி காலை 5.15 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் இந்த ரயில், அரக்கோணம், ரேனிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் இயக்கப்படுகிறது.