அதிபராக பதவியேற்றதில் இருந்து ட்ரம்ப், அரசு அலுவலகங்களில் ஆட்குறைப்பு செய்ய வேண்டும்… அரசு அலுவலகங்களில் தேவையில்லாத செலவுகள் அதிகம் செய்யப்படுகின்றன என தொடர்ந்து கூறி வந்தார்.
பொதுவாக, அரசு நிர்வாக முடக்கத்தின் போது, ஆட்குறைப்பு நடக்கும். பணியில் தப்பி பிழைத்துள்ள அனைத்து அரசு பணியாளர்களுக்குமே பணி முடக்கத்தின் போதிருந்த வேலை நாள்களுக்கான சம்பளம் கிடைக்காது. இவை அனைத்தையும் ட்ரம்ப் நல்ல சான்ஸாக பார்த்தார்.
அவர் நினைத்தது போலவே, கிட்டத்தட்ட 75,000 அரசு பணியாளர்கள் எந்த ஊதியமும் இல்லாமல் பணி நீக்கம் செய்யப்பட்டனர். ஆயிரக்கணக்கான பணியாளர்கள் எந்த சம்பளமும் இல்லாமல் பணியில் இருந்தனர்.
இதனால், ட்ரம்ப் ‘ஹேப்பி அண்ணாச்சி’ மோடில் இருந்தார்.
அதிபராக பதவியேற்றதிலிருந்து டிரம்ப், அரசு அலுவலகங்களில் ஆட்குறைப்பு செய்ய வேண்டும்… அரசு அலுவலகங்களில் தேவையில்லாத செலவுகள் அதிகமாக நடைபெறுகின்றன என தொடர்ந்து கூறி வந்தார்.
பொதுவாக, அரசு நிர்வாக முடக்கத்தின் போது ஆட்குறைப்பு நடைபெறும். பணியில் தொடர்ந்த அனைத்து அரசு பணியாளர்களுக்கும் பணி முடக்கத்தின் போது வேலை செய்த நாட்களுக்கான சம்பளம் வழங்கப்படாது. இவற்றையெல்லாம் டிரம்ப் ஒரு நல்ல வாய்ப்பாகக் கண்டார்.
அவர் நினைத்தது போலவே, கிட்டத்தட்ட 75,000 அரசு பணியாளர்கள் எந்த ஊதியமும் இல்லாமல் பணி நீக்கம் செய்யப்பட்டனர். ஆயிரக்கணக்கான பணியாளர்கள் எந்த சம்பளமும் இல்லாமல் பணியில் தொடர்ந்தனர்.
இதனால், டிரம்ப் ‘ஹேப்பி அண்ணாச்சி’ மூடில் இருந்தார்.
முதலில் அரசு நிர்வாக முடக்கம் விரைவில் முடிவுக்கு வந்துவிடும் என்று தான் நினைக்கப்பட்டது. ஆனால், 10 நாள்கள், 20 நாள்கள், 25 நாள்கள், 30 நாள்கள், என அரசு நிர்வாக முடக்கம் தொடர்ந்துகொண்டே வந்தது.
இந்த முடக்கத்தால், எந்தவொரு அதிகாரப்பூர்வ தரவுகளையும் அரசால் எடுக்க முடியவில்லை. இதனால், முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய யோசித்தார்கள். மக்களிடையே அடுத்து என்ன ஆகும்… வேலைவாய்ப்பிற்கு என்ன செய்வது போன்ற கேள்விகள் எழுந்தன. அரசுக்குமே எந்தத் திட்டத்தையும் உருவாக்கவும் முடியவில்லை… செயல்படுத்தவும் முடியவில்லை.
இதனால், ஏகப்பட்ட குழப்பங்கள். கடைசியில், விமான நிலையங்களை மூடுவது வரை சென்றது.
இடையில், 14 முறை செனட் கூடியும், எந்த முடிவுமே எட்டப்படவில்லை. இருதரப்பிற்கும் சமாதனம் ஏற்படுவதாக தெரியவில்லை, இருதரப்புமே விட்டுக்கொடுக்க தயாராக இல்லை.