நினைவாற்றல் என்பது மூளைக்கும் ஐம்புலன்களுக்கும் இடையேயான தகவல்கள் பரிமாற்றம் ஆகும். இவ்வாறு தகவல் பரிமாற்றம் நடைபெறும் போது ஆறாவது அறிவு (மனதின்) உதவியுடன் ஏன்? எதற்கு? எப்படி? என பல்வேறு வினாக்களுடன் சிந்தனை தூண்டப்படுகிறது. அதன் காரணமாக மாதா, பிதா, குரு, புத்தகம் மூலமாக கிடைக்கப்பெறும் விடைகள் மூளையில் சேமித்து “முதிர்ச்சி” அடைய வைக்கிறது. இத்தகைய முதிர்ச்சியே “அனுபவம்” என்று அழைக்கப்படுகிறது.
இவ்வாறு எவன் ஒருவன் சிறு வயது முதல் மாதா, பிதா, குரு, புத்தகம் மூலமாக தன் சிந்தனையினை அதிகம் தூண்டும் செயலில் நேரம் தவறாது ஈடுபடுகிறானோ அவனுடைய நினைவாற்றல் படிப்படியாக உயர்ந்த நிலையினை அடைகிறது.
இதன் மூலம் அறிவு கெட்டவன், அறிவு இல்லாதவன், முட்டாள் எனக் கூறுவதனை தவிர்த்து “நினைவாற்றல் இல்லாதவன்” எனக் கூற வலியுறுத்தப்படுகிறது.
போட்டித் தோ்வுகளில் 90 சதவீதம் “நினைவாற்றல்” கொண்டவர்கள் மட்டுமே வெற்றி பெருகிறார்கள் என்பதனைக் கருத்தில் கொள்ள வேண்டும். ஏனெனில் நேரம் தவறாது புத்தகத்தினை வாசித்து படிக்கும் போது சிந்தனை தூண்டப்பட்டு மூளை முதிர்ச்சி அடைவதாகும்.
“சிந்தனையால் முதிர்ச்சி அடைந்து அனுபவம் பெற்ற மனிதனாக மாறுகிறான்”
ஒரு தாவரம் தன் வேரினைக் ஆழமாகச் செலுத்தி எவ்வாறு தனக்கு தேவையான தாது பொருட்களை ஊறிஞ்சி தன்னுடைய மற்ற பாகங்களுக்கு உயிர்ப்பு கொடுக்கிறது. இது போல சிந்தனை என்னும் வேரினை ஆழமாகச் செலுத்தி பல்வேறு தகவல்களை ஊறிஞ்சி சிந்தனையின் பயனாக தன்னுடைய மூளையினை பலப்படுத்தினால் “நினைவாற்றல்” உயிர்ப்படைகிறது. சாதிக்கலாம்…
படித்தவன் – அறிவாளி
கற்றவன் – புத்திசாலி
அறிவாளி + புத்திசாலி = அனுபவசாலி (திறமைசாலி)