முட்டாள் VS அறிவாளி! பங்குச் சந்தைச் சரிவில் நீங்க எப்படிப்பட்ட முதலீட்டாளர்?

Spread the love

ஹாய் முதலீட்டாளரே! போர்ட்ஃபோலியோவைத் திறந்தாலே ரத்தக் களறியாக இருக்கிறதா? உலகப்போரால் பங்குச்சந்தை அதலபாதாளத்திற்குப் போகிறது. பதற்றம், பயம்… “எல்லாத்தையும் வித்துட்டு பேங்க்ல பிக்ஸட் டெபாசிட்ல (FD) போட்டுடலாம். கேஷ்-ஆ இருந்தா சேஃப்!” என்று இந்நேரத்தில் தோன்றுகிறதா?

ஒரு நிமிடம் பொறுங்கள்…

பொருளாதார அறிஞர் ஹென்றி ஹஸ்லிட் ஒரு அருமையான விஷயம் சொல்வார்:

“கண்ணுக்குத் தெரிவது vs தெரியாதது.”

சந்தையில் நடக்கும் நஷ்டம் நம் கண்ணுக்குத் தெரியும். அதனால் பயப்படுகிறோம். ஆனால், பேங்கில் நாம் பாதுகாப்பாக வைத்திருப்பதாக நினைக்கும் பணத்தை, “பணவீக்கம்’ (Inflation) என்ற அரக்கன் தினமும் கொஞ்சம் கொஞ்சமாகத் தின்பது நம் கண்ணுக்குத் தெரிவதில்லை!

Inflation (Representational Image)

Inflation (Representational Image)

போர் வந்தால் பணவீக்கம் ஏறுமா? டேட்டா என்ன சொல்கிறது?

“போர் மேகங்கள் சூழ்கின்றன, இப்போது பணமாக (Cash) கையில் வைத்திருப்பதுதானே புத்திசாலித்தனம்?” என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், லாஜிக் நேர்மாறானது.

வரலாற்றைப் புரட்டிப் பாருங்கள். போர் வந்தால் என்ன நடக்கும்? கச்சா எண்ணெய் விலை எகிறும். சப்ளை செயின் (Supply chain) உடையும். 2022-ல் ரஷ்யா-உக்ரைன் போர் தொடங்கியபோது, கச்சா எண்ணெய் பீப்பாய் 120 டாலரைத் தொட்டது. போக்குவரத்துச் செலவு ஏறியது. விளைவு? அமெரிக்காவிலேயே பணவீக்கம் 9.1% ஆக உச்சம் தொட்டது; இந்தியாவிலும் 7.8% ஆக எகிறியது. அதாவது, சாதாரண காலங்களை விட, போர் மற்றும் நெருக்கடி காலங்களில்தான் பணவீக்கம் மிக வேகமாக உங்கள் பணத்தின் மதிப்பை அழிக்கும். புயல் வரும்போது பாதுகாப்பிற்காக ஓட்டைப் படகில் ஏறுவதற்குச் சமம் இது!

உத்தரவாதமான நஷ்டம்: ஒரு சின்ன கணக்கு!

2021-ல் உங்களிடம் ₹10 லட்சம் இருந்தது. ஷேர் மார்க்கெட் ரிஸ்க் எதற்கு என்று பயந்து, அதை 6% வட்டியில் பேங்கில் போட்டீர்கள். ஐந்து வருடம் கழித்து இன்று (2026-ல்), வட்டிக்கு 30% வரி கட்டியது போக, உங்கள் கையில் சுமார் ₹12.3 லட்சம் இருக்கும்.

ஆனால், கடந்த 5 வருடங்களில் சராசரி பணவீக்கம் 6%. அதாவது, 2021-ல் 10 லட்சத்துக்கு வாங்கிய அதே பொருளை இன்று வாங்க உங்களுக்கு ₹13.4 லட்சம் வேண்டும்! நிஜத்தில் உங்கள் வாங்கும் திறன் (Purchasing power) 1 லட்சத்துக்கும் மேல் காலி! பேங்கில் பணத்தை முடக்கி வைப்பது என்பது, உங்களுக்கு நீங்களே கொடுத்துக்கொள்ளும் ‘உத்தரவாதமான நஷ்டம்’. அதே பணத்தை, ஒரு தரமான ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டில் மிதமான 12% கூட்டு வட்டியில் (CAGR) விட்டிருந்தாலும், வரிகள் போக இன்று அது 16 லட்சத்தைத் தாண்டியிருக்கும்.

“போர் வந்து மார்க்கெட் ‘ஜீரோ’ ஆயிட்டா என்ன பண்றது?”

நிறைய பேருக்கு இந்தச் சந்தேகம் உண்டு. நிஃப்டி ‘ஜீரோ’ ஆவது என்றால் என்ன தெரியுமா? டாடா, ரிலையன்ஸ், HDFC, இன்போசிஸ் என இந்தியாவின் அச்சாணியான 50 கம்பெனிகளும் இழுத்து மூடப்பட்டுவிட்டன என்று அர்த்தம். நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரமும் செத்துவிட்டது என்று அர்த்தம்.

அப்படி ஒரு பேரழிவு வந்தால், இந்திய ரூபாயின் மதிப்பே அதலபாதாளத்திற்குப் போய்விடும். வெனிசுலாவிலும் ஜிம்பாப்வேயிலும் நடந்ததுபோல, ஒரு பிரெட் வாங்க ஒரு சாக்குப் பை நிறைய பணம் கொண்டு போக வேண்டியிருக்கும். அப்போது பேங்கில் இருக்கும் உங்கள் 10 லட்சம் வெறும் காகிதக் கட்டுகள்தான்! எந்தப் போர் வந்தாலும், மக்கள் சோப்பு போடுவதையும், மருந்து மாத்திரை வாங்குவதையும் நிறுத்தப் போவதில்லை. பிசினஸ் நடந்துகொண்டுதான் இருக்கும்.

cash - dividend - டிவிடெண்ட் - பணம்

cash – dividend – டிவிடெண்ட் – பணம்

“எனக்கு இப்போ பணம் அவசரமா வேணுமே..?”

உங்களுக்கு எவ்வளவு பணம் தேவையோ அதை மட்டும் எடுங்கள் (Partial Withdrawal). தலை வலிக்கிறது என்பதற்காக தலையையே வெட்ட முடியுமா? மொத்த முதலீட்டையும் நஷ்டத்தில் விற்றுவிட்டு வெளியேறாதீர்கள்!

சரிவைக் கண்டு ஓடுபவர்கள் சாதாரண ஆட்கள். சரிவை வாய்ப்பாக மாற்றுபவர்களே புத்திசாலிகள். குழப்பமான இந்த நேரத்தில் எந்தெந்த ஃபண்டுகள் பாதுகாப்பானவை? சந்தையின் அடுத்தகட்ட நகர்வு என்ன என்று குழப்பமா?

உங்கள் குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து, தெளிவான முதலீட்டு வியூகத்தை வகுத்துத் தர வருகிறது ‘லாபம்’ (Labham) வழங்கும் சிறப்பு ஆன்லைன் நிகழ்ச்சி.

Labham Workshop March 25 2026 | பங்குச் சந்தை

Labham Workshop March 25 2026 | பங்குச் சந்தை

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *