தி.மு.க கூட்டணி அமைந்ததிலிருந்து சி.பி.ஐ, சி.பி.எம் ஆகிய இருவருக்குமே ஒரே எண்ணிக்கையில்தான் சீட் தரப்பட்டிருக்கிறது. ஆனால் 5 சீட்டுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஓகே சொல்லிவிட்ட நிலையில் சி.பி.எம் மாநிலச் செயலாளர் சண்முகம் என்ன செய்யப்போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சீனியர்களிடம் பேசினோம், “5 சீட் தான் தர முடியும் என திட்டவட்டமாக சொல்லிவிட்டது தி.மு.க, ஆனால், சண்முகம் தோழரும், முன்னாள் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தோழரும் 6 சீட் இல்லாமல் கையெழுத்துப் போடக் கூடாது என கறார் காட்டுகிறார்கள்.
ஐந்தாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு தி.மு.க தரப்பு தயாராக இல்லை. எனவே 5 சீட்டில் முடியவே வாய்ப்புகள் இருக்கிறது. இதை ஏற்க மாட்டோம் என மாநிலச் செயலாளர் சொன்னால் உறுதியாக வெற்றி வாய்ப்பு குறைவாக இருக்க கூடிய தொகுதிகளை நம்மிடம் தள்ளிவிடுவார்கள் என்ற அச்சம் கட்சிக்குள் எழுந்திருக்கிறது” என்றனர்.