அண்ணா பல்கலைக்கழகத்தில் இயங்கும் வளாக பொறியியல் கல்லூரிகளில், முதலாமாண்டு மாணவர்களுக்கு வரும் ஆக. 11 ஆம் தேதி வகுப்புகள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு
அண்ணா பல்கலைக்கழகத்தில் இயங்கும் வளாக பொறியியல் கல்லூரிகளில், பி.இ., பி.டெக். உள்ளிட்ட படிப்புகளில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வரும் ஆக. 11 ஆம் தேதி வகுப்புகள் தொடங்கப்படும். முன்னதாக ஆக. 5 முதல் ஆக. 9 வரை அறிமுக வகுப்புகள் நடைபெறும்.
அதேபோல், அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வரும் ஆக. 18 ஆம் தேதி வகுப்புகள் தொடங்கப்படும்.
முதல் செமஸ்டர் தேர்வுகள் வரும் டிசம்பர் 16 ஆம் தேதி தொடங்கும். தேர்வுகள் நிறைவடைந்த பிறகு, அடுத்த செமஸ்டருக்கான வகுப்புகள் ஜன. 5 ஆம் தேதி தொடங்கப்படும் என்று குறிப்பிடப்ப்பட்டுள்ளது.
3 கட்டங்களாக நடைபெறும் பொறியியல் கலந்தாய்வு ஆகஸ்ட் 23ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.
இதையும் படிக்க: முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் நோக்கி ஆகஸ்ட் 7-ல் அமைதிப் பேரணி!