முதலீடுகளுக்கான முதல் முகவரியாக தமிழ்நாடு உருவாகியிருப்பதாக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (ஆக. 6) சென்னை அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்திந்ததுப் பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது:
”தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி இரட்டை இலக்கத்தை எட்டி இருக்கிறது. ஏற்கனவே நாம் சொல்லிருக்கக்கூடிய 9.69% என்கிற அந்த ஜிஎஸ்டிபி(GSDP) உடைய இலக்கையும் தாண்டி, இன்றைக்கு 11.8% பொருளாதார குறியீடுகள் உயர்ந்து இருக்கின்றன. ஏறத்தாழ 12% நெருங்கி வரக்கூடிய வாய்ப்பை பெற்று இருக்கிறோம்.
நம்முடைய சாதனையை நாம்தான் முறியடிக்க முடியும் என்கிற வகையில் 9.69% என்ற ஒற்றை இலக்கத்தில் இருந்த பொருளாதார வளர்ச்சி சதவீதத்தை இன்றைக்கு இரட்டை இலக்கத்திற்கு கொண்டு வந்திருக்கிற மகத்தான சாதனையை முதலமைச்சருடைய ஆட்சி உருவாக்கியிருக்கிறது.