முதலீடு மூலம் 12 ஆண்டுகளில் ரூ.1 கோடி சேர்ப்பது சாத்தியம்… எப்படி தெரியுமா?

Spread the love

முதலீடு மூலம் 12 ஆண்டுகளில் ரூ.1 கோடி சேர்ப்பது சாத்தியமா?

ஆம்! இது சாத்தியமே.

பங்குச் சந்தை சார்ந்த ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் எஸ்.ஐ.பி (SIP) முறையில் மாதம் ₹20,000 முதலீடு செய்து, அதை ஆண்டுக்கு ₹1,500 வீதம் ஸ்டெப் அப் (Step-Up) செய்வதாக வைத்துக் கொள்வோம். அந்த முதலீட்டுக்கு சராசரியாக 12%  வருமானம் கிடைத்தால், சுமார் 12 ஆண்டுகளில் ₹1 கோடி சேர்க்க முடியும்.

இது எப்படி சாத்தியம்? இதன் ரகசியம் டாப் அப் எஸ்.ஐ.பி முறைதான்.

எஸ்.ஐ.பி SIP
கௌஷிக் கேதாரம், நிறுவனர், www.intelli360.in

டாப் அப் எஸ்.ஐ.பி என்றால் என்ன?

டாப் அப் எஸ்.ஐ.பி என்பது, உங்கள் மாத எஸ்.ஐ.பி தொகையை ஒவ்வொரு ஆண்டும் ஒரு நிர்ணயிக்கப்பட்ட தொகை அல்லது சதவீதம் உயர்த்துவது ஆகும்.
உதாரணமாக:

  • 1 -ம் ஆண்டு: மாதம் ₹20,000

  • 2 -ம் ஆண்டு: மாதம் ₹21,500

  • 3 -ம் ஆண்டு: மாதம் ₹23,000

  • … இப்படி ஆண்டுக்கு ₹1,500 வீதம் அதிகரித்தல்.

உங்கள் வருமானம் வருடா வருடம் உயர்வதைப் போல, உங்கள் முதலீட்டையும் உயர்த்துவதால், கூட்டு வளர்ச்சியின் பலன் மிக வேகமாக செயல்படத் தொடங்குகிறது.

டாப் அப் எஸ்.ஐ.பி

₹1 கோடி+ எப்படி உருவாகிறது?

  • ஆரம்ப எஸ்.ஐ.பி: ₹20,000 / மாதம்

  • ஆண்டுக்கு டாப் அப் எஸ்.ஐ.பி: ₹1,500

  • காலம்: 12 ஆண்டுகள்

  • எதிர்பார்க்கும் வருமானம்: ஆண்டுக்கு சராசரியாக 12%

  • முதலீடு ஒவ்வொரு மாதமும் செய்யப்படுகிறது

டாப் அப் எஸ்.ஐ.பி – விளக்க அட்டவணை 

டாப் அப் எஸ்.ஐ.பி

சாதாரண எஸ்.ஐ.பி vs டாப் அப் எஸ்.ஐ.பி (ஒப்பீடு)

சாதாரண எஸ்.ஐ.பி vs டாப் அப் எஸ்.ஐ.பி (ஒப்பீடு)

முக்கிய குறிப்புகள்

  • வருமானம் உத்தரவாதம் அல்ல: 

  • ஆண்டுக்கு சராசரியாக 12% வருமானம் என்பது எதிர்பார்ப்பு மட்டுமே. பங்குச் சந்தை நிலவரத்தைப் பொறுத்து வருமானம் கூடலாம் அல்லது சிறிது குறையலாம்.

  • நீண்ட கால நோக்கம் அவசியம்:

  • எஸ்.ஐ.பி மற்றும் டாப் அப் எஸ்.ஐ.பி இரண்டுமே நீண்ட கால முதலீட்டில் தான் சிறந்த பலன் தரும்.

  • ஒழுங்கு தான் வெற்றி: 
    எஸ்.ஐ.பி. முதலீட்டை இடை நிறுத்தாமல் தொடர்ச்சியாக முதலீடு செய்வதே முக்கியம்.

நிறைவாக, மாதம் ₹20,000 என்ற தொகை பெரியதாகத் தோன்றலாம். ஆனால், ஆண்டுக்கு ₹1,500 என்ற சிறிய உயர்வு மூலம், 12 ஆண்டுகளில் ₹1 கோடி தொகையை உருவாக்குவது சாத்தியமாகிறது.

டாப் அப் எஸ்.ஐ.பி என்பது, அதிக சம்பளம் வரும் போது, அதிக செல்வம் உருவாக்கத் தொடங்க ஒரு புத்திசாலித்தனமான வழிமுறை ஆகும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *