முதல்வருக்கு நன்றி தெரிவித்த அக்‌ஷய் குமார்!

Dinamani2f2025 02 242fnrhluwco2fakshay.jpg
Spread the love

உத்தரப் பிரதேசத்தின், பிரயாக்ராஜில் நிகழ்ந்துவரும் கும்பமேளாவில் பாலிவுட் நடிகரான அக்‌ஷய் குமார் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார்.

சங்கமத்தில் நீராடி பின்னர் அவர் கூறியதாவது,

2019-ல் ஸ்கை போர்ஸ் என்ற திரைப்படத்தின்போது கும்பமேளாவைப் பார்வையிட்டதாகவும், இந்தமுறை கும்பமேளா ஏற்பாடுகளில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

கோடிக்கணக்கான மக்கள் ஒரே இடத்தில் கூடும் வகையில் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்ததற்காக முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

கும்பமேளா கடந்த 2019-ல் நடைபெற்றபோது, ​​மக்கள் மூட்டை முடிச்சுகளுடன் வருவார்கள் என்பது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது, ஆனால் இந்த முறை அம்பானிகள், அதானிகள் மற்றும் பெரிய நடிகர்கள், அனைவரும் வருகைதரும் வகையில் கும்பமேளாவிற்கான ஏற்பாடுகள் சிறப்பாகச் செய்யப்பட்டுள்ளன.

மேலும், முகம் கோணாமல் மக்களை வழிநடத்தும் காவல்துறையினருக்கும், துப்புரவுத் தொழிலாளர்களுக்கும் நான் கைகளைக் கூப்பி நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

மகா கும்பமேளா ஜனவரி 13-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 26-ம் தேதி முடிவடைகிறது. கும்பமேளா நிகழ்வில் விக்கி கௌஷல், சோனாலி பிந்த்ரே, விஜய் தேவரகொண்டா மற்றும் பலர் உள்பட முக்கிய பிரபலங்களும் கலந்து கொண்டனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *