முதல்வர் தலைமையில் மாணவ – மாணவியர் போதை ஒழிப்பு உறுதிமொழி: சிறப்பாக பணி செய்த போலீஸாருக்கு பதக்கம் | Under the leadership of the Chief Minister, the student-girl pledge of drug eradication:

1294256.jpg
Spread the love

சென்னை: முதல்வர் மு.கஸ்டாலின் தலைமையில் கல்லூரி மாணவ – மாணவியர் இன்று (ஆக.12) போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற தலைப்பில் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். இந்த நிகழ்வில், போதைப் பொருள் உற்பத்தி மற்றும் கடத்தலை தடுத்து சிறப்பாக பணி செய்த போலீஸாருக்கு, ‘முதலமைச்சர் காவலர் சிறப்பு பதக்கங்கள் வழங்கப்பட்டது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை பல்கலைக்கழகத்தில் இன்று காலை காவல்துறை சார்பில், ‘போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு’ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான கல்லூரி மாணவ – மாணவியர் போதைப்பொருட்கள் ஒழிப்பு குறித்த உறுதிமொழியை முதல்வர் தலைமையில் ஏற்றுக்கொண்டனர்.

தொடர்ந்து முதல்வர், மாநிலத்தில் போதைப்பொருள் உற்பத்தி மற்றும் சட்டவிரோதக் கடத்தலை ஒழிப்பதில் சிறப்பாக பணியாற்றிய போலீஸாருக்கு 2024-ம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் காவலர் சிறப்பு பதக்கங்களை வழங்கி சிறப்பித்தார்.

இந்நிகழ்ச்சியில், உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, உள்துறை செயலர் நீரஜ்குமார், டிஜிபி-யான சங்கர் ஜிவால், சென்னை காவல் ஆணையர் அருண், சட்டம் – ஒழுங்கு கூடுதல் டிஜிபி-யான டேவிட்சன் தேவாசீர்வாதம், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் டிஜிபி-யான அமல்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *