அதுக்கு முன்னாலயும் வெயிட் குறைக்கணும்னு தோணும். ஆனா அதை சீரியஸா எடுத்துக்கமாட்டோம். ஷாப்பிங் போனா நம்ம சைஸுக்கு டிரஸ் கிடைக்காதப்போ ஒரு ஸ்ட்ரெஸ் வரும், அப்புறம் சரியாகிடும். இந்தச் சம்பவங்களுக்குப் பிறகு வெயிட் லாஸ் பண்ணணும்ன்றதை சீரியஸா எடுத்துக்கணும்னு நினைச்சோம்.
வெயிட் குறைக்க மாத்திரை, ஊசி, சர்ஜரினு எவ்வளவோ குறுக்குவழிகள் எல்லாம் சொன்னாங்க. எனக்கும் என் கணவருக்கும் அதுல உடன்பாடு இல்லை. அதனால அறிவியல்பூர்வமா, ரொம்ப மெதுவா, நிலையா வெயிட்டைக் குறைக்கணும்னு நினைச்சோம்.

அப்ப நான் 105 கிலோ, என் கணவர் 120 கிலோ வெயிட் இருந்தாரு. ஆரம்பத்துல ஒருநாளைக்கு வெறும் 15 நிமிஷம் வாக்கிங் போகத் தொடங்கினோம். இப்படித்தான் எங்களோட ‘வெயிட் லாஸ் ஜர்னி’ மெதுவா ஆனா உறுதியா ஆரம்பிச்சது. அப்புறம் வாக்கிங் போற நேரத்தைப் படிப்படியா அதிகப்படுத்தினோம்.
தொடர்ந்து ஜிம்ல ஒரு பர்சனல் டிரெயினர் வெச்சு வொர்க்அவுட் பண்ண ஆரம்பிச்சோம். டயட்னு வரும்போது நாங்க எதையும் திடீர்னு கட் பண்ணல. ஏழு நாள்ல 7 கிலோ குறையும்னு சொல்ற ‘க்ராஷ் டயட்’ எதையும் நாங்க நம்பல.
அதுமாதிரியான டயட்டுகள் எல்லாம் உடம்புல உள்ள தண்ணீரை மட்டும்தான் குறைக்கும். நமக்குத் தேவையானது ‘ஃபேட் லாஸ்’ (Fat loss). அதுக்கு நாம சாப்பிடுற கலோரியை விட, எரிக்கிற கலோரி அதிகமா இருக்கிற, ‘நெகட்டிவ் கலோரி பேலன்ஸ்’ தான் சரியானது.