முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை(ஜன. 26) அரிட்டாபட்டி பயணம்?

Dinamani2f2024 11 202fzm9pr8yo2fmk Stalin Tweet Desk Bench Edi.jpg
Spread the love

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை(ஜன. 26) அரிட்டாபட்டி செல்லவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மதுரை மாவட்டம், மேலூா் அருகே அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைக்க கடந்த ஆண்டு நவம்பா் மாதத் தொடக்கத்தில் ஏலத்தின் மூலம் மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது.

இந்நிலையில் சுரங்கம் தோண்டும் திட்டத்தை ரத்து செய்யக் கோரி, அரிட்டாபட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதி மக்கள், அரசியல் கட்சியினா், பல்வேறு அமைப்பினா் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். தமிழக அரசும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன் சட்டப்பேரவையிலும் தனித் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றத்திலும் தமிழக எம்.பி.க்கள் குரல் கொடுத்தனா்.

இதையும் படிக்க | டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து: மத்திய அரசு

தொடர்ந்து, தமிழக பாஜக தலைவா் கே. அண்ணாமலை தலைமையிலான பாஜக குழுவினா், அரிட்டாபட்டி அம்பலக்காரா்களுடன் மத்திய சுரங்கத் துறை அமைச்சா் கிஷண் ரெட்டியை ஜன. 22 அன்று சந்தித்து சுரங்கத் திட்டத்தை ரத்து செய்யும்படி கோரிக்கை விடுத்தனா். திட்டத்தை ரத்து செய்வது குறித்து பிரதமருடன் ஆலோசனை நடத்திய பிறகு முடிவெடுக்கப்படும் என்று அமைச்சா் கிஷண் ரெட்டி உறுதியளித்தாா்.

இதன்பின்னர் அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான ஏலத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு ஜன. 23 அன்று அறிவித்தது. இதனை அரிட்டாப்பட்டி மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை(ஜன,. 26) அரிட்டாபட்டி செல்லவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாளை காலையில் குடியரசு தின நிகழ்வுகள் முடிந்தபிறகு விமானம் மூலமாக மதுரை செல்லும் அவர், சாலை வழியாக அரிட்டாபட்டி சென்று அங்கு நடைபெறும் பாராட்டு விழாவில் கலந்துகொள்ளவிருப்பதாகக் கூறப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *