“முதல்வர் வாகனம் முன்னே… செய்தி துறை வாகனம் பின்னே!” – செய்தி துறைக்கு செக் வைக்கும் அ.தி.மு.க! | ADMK complains against state media department for covering cm campaign

Spread the love

இந்த அதிகாரிகள் தி.மு.க கட்சி மற்றும்  முதல்வரும் தொடர்புடைய தேர்தல் பிரச்சார காட்சிகள் மற்றும் தகவல்களை சேகரித்து, அவற்றை செய்தித்தாள்கள், தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் சமூக ஊடகங்களில்  பரப்ப உதவி செய்கின்றனர். இதற்காக அரசின் தகவல் மற்றும் பொதுத் தொடர்புத் துறைக்கு சொந்தமான வீடியோ கேமரா, புகைப்பட கருவிகள் மற்றும் நேரலை ஒளிபரப்பு சாதனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இது தேர்தல் நடத்தை விதிமுறைகளை வெளிப்படையாக மீறுவது மட்டுமல்லாமல், அரசின் அதிகாரப்பூர்வ இயந்திரங்களை அரசியல் நலன்களுக்கு தவறாக பயன்படுத்துவதாகும்” என்று குறிப்பிட்டுள்ளார். 

நேற்று காலை பா.ஜ.க தரப்பு பத்திரிக்கையாளர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் சென்னை மாநகர ஆணையாளர் அருண் நடவடிக்கைகள் இருக்கிறது. அவரை உடனடியாக மாற்ற வேண்டும் என புகார் அளித்தனர். அதை தொடர்ந்து நேற்று இரவே சென்னை மாநகர காவல்துறை ஆணையாளர் மாற்றப்பட்டார். இன்று அ.தி.மு.க செய்தி துறை அதிகாரிகளின் பெயரையே பட்டியலிட்டு, தேர்தல் ஆணையரிடம் புகார் கொடுத்துள்ளது. இதனால், செய்தி துறை அதிகாரிகளையும் தேர்தல் ஆணையம் மாற்றும் நடவடிக்கையில் இறங்கலாம் என்கிற செய்தி தற்போது வெளியாகியுள்ளது. 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *