முதல்வர் வேட்பாளராக இபிஎஸ்-ஐ ஏற்க வாய்ப்பே இல்லை – டிடிவி தினகரன் | TTV Dhinakaran slams edappadi palanisami

1376582
Spread the love


சென்னை: முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி இருக்கும்வரை, அமமுக அதை ஏற்க வாய்ப்பே இல்லை என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

தஞ்சையில் அண்ணா சிலைக்கு மரியாதை செலுத்திய பின்னர், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் பேசியதாவது, “நாங்கள் அங்கம் வகிக்கும் கூட்டணி நிச்சயம் வெற்றிபெறும். அதன் அர்தத்தை வரும் மே மாதம் நீங்கள் தெரிந்து கொள்வீர்கள்.

75 ஆண்டு காலம், 50 ஆண்டு காலம் வளர்ந்த கட்சிகளின் கட்டமைப்புக்கு ஈடாக அமமுக உருவாகிவிட்டது. அமமுக வெற்றி முத்திரை பதிக்கும். முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி இருக்கும்வரை, அமமுக அதை ஏற்க வாய்ப்பே இல்லை. எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்வது, அவருடைய விவகாரம்” என்று தெரிவித்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *