“இவ்வளவு அஜாக்கிரதையாகவாக இருப்பீர்கள். முதல்வரின் நிகழ்ச்சி இருக்கிறதென்று தெரியுமல்லவா? விஜய் தரப்பிடம் தகவலைச் சொல்லி அவரை முதல்வரின் வருகைக்கு முன்போ பின்போ வரச் சொல்லியிருக்க வேண்டியதுதானே? இதெல்லாம் வழக்கமான நடைமுறைதானே. இதில் கூடவா கோட்டை விடுவீர்கள்’ என ரெய்டு விட்டிருக்கின்றனர்.
‘நிகழ்ச்சி 11 மணிக்குதான் என தவெக தரப்பு அறிவித்திருந்தது. அதனால் இயல்பாகவே விஜய் 10:40 க்கு மேல்தான் நீலாங்கரை வீட்டிலிருந்து கிளம்புவார் என அனுமானித்திருந்தோம். ஆனால், திடீரென உடனிருந்தவர்கள் எதோ ஜோசிய காரணங்களை அடுக்க சீக்கிரமே கிளம்பியிருக்கிறார் விஜய். மேலும், வேறு எதுவும் பெரிதாக இல்லாததால் செய்தியாளர்கள்தான் இந்த விவகாரத்தை ஊதி பெரிதாக்கி லைவ்விலேயே அடித்துவிட்டார்கள்’ என மேலிடத்திடம் கூறி ஒருவழியாக சமாளித்ததாக ஸ்பாட்டிலிருந்த உளவுத்துறையினர் பெருமூச்சு விட்டனர்.
சி.எம் கான்வாய்க்காக விஜய்யின் வாகனம் நிறுத்தப்பட்டதென பரவிய செய்தியில்தான் முதல்வர் தரப்பு கடுப்பானதாகவும் அதனால்தான் ஸ்பாட்டிலிருந்த உளவுத்துறையை பிடித்து அதிகாரிகள் வாங்கு வாங்கென வாங்கியதாகவும் கூறுகின்றனர் காவல்துறை வட்டாரத்தினர்.