‘கூட்டணி குறித்து ராகுல் சொல்லியனுப்பிய முக்கிய மெசேஜ்களை கே.சி.வேணுகோபால் முதல்வரிடம் கூறியிருக்கிறார்’ என்கின்றனர் காங்கிரஸ் வட்டாரத்தினர்.
‘அமைச்சரவையில் பங்கு கேட்டோம். அதை கொடுக்க முடியாதென முதல்வரே அறிவித்துவிட்டார். இதற்கு மேல் தேர்தலுக்கு முன்பாக அமைச்சரைவையில் பங்கு கேட்பதில் பிரயோஜனமில்லை. எனில், கடந்த முறையை விட அதிக தொகுதிகளையும் ராஜ்யசபா சீட்டையும் எதிர்பார்க்கிறோம்.
ஆனால், திமுக 2028 இல் தான் எங்களுக்கு ராஜ்ய சபாவை கொடுப்போம் என்கின்றனர். மேலும், மாணிக்கம் தாகூர் மற்றும் பிரவீன் சக்கரவர்த்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் திமுக தலைமை எதிர்பார்க்கிறது. அதற்கெல்லாம் நாங்கள் ஒத்துக்கொண்டால் கட்சி ரொம்பவே பலவீனமாக தெரியும்.

மாணிக்கம் தாகூர், பிரவின் சக்கரவர்த்தி ஆகியோர் இனி கூட்டணிக்கு நெருக்கடி ஏற்படுத்தும் வகையில் பேசமாட்டார்கள் என்று உறுதியளித்திருக்கிறோம். அதேமாதிரி அடுத்த மாதமே எங்களுக்கு ராஜ்யசபா சீட்டை ஒதுக்குங்கள் என கேட்கிறோம். மேலும், 30 தொகுதிகள் வரைக்குமாவது பரீசிலியுங்கள் என்றும் கூறியிருக்கிறோம்.
இவை சம்பந்தமாக ராகுல் சொல்லியனுப்பிய மெசேஜ்களையும் முதல்வரின் காதில் போட்டிருக்கிறார் கே.சி.வேணுகோபால். இதெல்லாம் ஒரு இறுதிக்கட்ட இழுபறிதான். சீக்கிரமே சுமுகமாக பேசி முடித்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு விடுவோம்’ என்கின்றனர் கதர் சட்டையினர்.
காங்கிரஸின் கோரிக்கைகள் குறித்து முதல்வர் எந்த முடிவையும் சொல்லாததால்தான் ஊடகத்திடனரிடமும் எதையும் கமிட் செய்யாமல் வேறு ரூட்டை பிடித்து கிளம்பியிருக்கிறார் கே.சி.வேணுகோபால் என்கின்றனர் உள்விவரம் அறிந்த சிலர்.