முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக எம்எல்ஏ-க்கள் கூட்டம்  | DMK MLAs Meeting held at Chennai tomorrow

1354164.jpg
Spread the love

சென்னை: சென்னையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை (மார்ச் 13) திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என்று, அரசு தலைமை கொறடா கா.ராமச்சந்திரன் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நாளை (மார்ச் 14) வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணி அளவில் சென்னை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் நடைபெறும். அதுபோது திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும், என்று அவர் கூறியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் நாளை (மார்ச் 14) தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. தொடர்ந்து வேளாண் பட்ஜெட்டும், மானியக் கோரிக்கை மீதான விவாதங்களும் நடைபெறவுள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடர், தமிழக அரசின் நலத்திட்டங்களின் நிலை குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படலாம்.” என்று கூறப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *