சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த வழக்குரைஞா் ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை பிணவறைக்கு வெளியே கூடிய அவரது ஆதரவாளர்கள் குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி கோழங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவுகிறது. போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும், இந்த கொலை சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ராஜிநாமா செய்ய வேண்டும் என்று போராட்டக்காரர்கள் கோழங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மருத்துவமனை வளாகத்தில் காவல் உயரதிகாரிகள் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சென்னை பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே வெள்ளிக்கிழமை மாலை ஆம்ஸ்ட்ராங் அடையாளம் தெரியாத கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டார். அவரது உடல்
உடல்கூறு ஆய்வுக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதையடுத்து அந்த பகுதியில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மூடப்பட்டது மற்றும் பெருநகர போக்குவரத்துக் கழகம் (எம்டிசி)அவற்றின் பேருந்துகள் சேவைகளை நிறுத்தியது.
சென்னை மருத்துவமனைக்கு வெளியே பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதையடுத்து கொலை வழக்கில் தொடா்புடைய குற்றவாளிகளைக் கைது செய்ய 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது.
தனிப்படையினா் அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கைப்பற்றி ஆய்வு செய்தனா். இதில், கொலையாளிகள் உணவு விநியோகம் செய்யும் ஒரு நிறுவன சீருடையில் வந்தது தெரியவந்தது.
இதனிடையே, சென்னை அண்ணாநகர் காவல் நிலையத்தில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 8 பேர் சரணடைந்தனர்.
வடசென்னை சட்டம்-ஒழுங்கு கூடுதல் காவல் ஆணையர் ஆஸ்ரா கார்க் கூறுகையில், “கொலை வழக்கில், 4 மணிநேரத்தில் 8 நபர்களை கைது செய்து தீவிர விசாரணை செய்து வருகிறோம். குற்றவாளிகளைக் கைது செய்ய 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. விசாரணைக்கு பின்னர் தான் கொலையின் நோக்கம் என்ன என்பது குறித்து தெரியவரும்.
கொலையின் உண்மையான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்படும். இந்த கொலை சம்பவத்தின் போது கொலையாளிகள் துப்பாக்கியை பயன்படுத்தவில்லை, சில கூர்மையான ஆயுதங்கள், கத்தியால் வெட்டிதான் கொலை செய்துள்ளனர்
மாயாவதி கண்டனம்
உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான மாயாவதி, அக்கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொடூரமான படுகொலைக்கு கண்டனம் தெரிவித்துள்ளதோடு, “குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும்” என்று மாநில அரசை கேட்டுக் கொண்டுள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பாக ஆளும் திமுக அரசை விமர்சித்த அதிமுக பொதுச்செயலாள எடப்பாடி கே. பழனிசாமி, மாநிலத் தலைவரே படுகொலை செய்யப்பட்டால், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை விமர்சிப்பதில் என்ன பயன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.