ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் எடுத்துள்ளது.
பாகிஸ்தான் அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடரின் முதல் போட்டி குயின்ஸ்லாந்து ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட் செய்தது.
இதையும் படிக்க: வங்கதேச அணிக்காக ஷகிப் அல் ஹசன் மீண்டும் விளையாடுவாரா?
பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களான ஓமைர் யூசஃப் 16 ரன்கள், சைம் ஆயுப் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். அதிகபட்சமாக உஸ்மான் கான் மற்றும் தையப் தாஹிர் தலா 39 ரன்கள் எடுத்தனர். இர்ஃபான் கான் 27 ரன்கள் எடுத்தார்.
ஜிம்பாப்வே தரப்பில் சிக்கந்தர் ராஸா, நிகராவா, மஸகட்சா மற்றும் ரியான் பர்ல் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஜிம்பாப்வே அணி விளையாடி வருகிறது.