முதல் டெஸ்ட்: வலுவான நிலையில் தென்னாப்பிரிக்கா!

Dinamani2f2024 11 282f6cpvfft12fgdem07tweaax1sd.jpg
Spread the love

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வலுவான நிலையில் உள்ளது.

இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நேற்று (நவம்பர் 27) டர்பனில் தொடங்கியது. இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 191 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் டெம்பா பவுமா 70 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, கேசவ் மகாராஜ் 24 ரன்கள் எடுத்தார்.

இலங்கை தரப்பில் அஷிதா ஃபெர்னாண்டோ மற்றும் லகிரு குமாரா தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். விஸ்வா ஃபெர்னாண்டோ மற்றும் பிரபாத் ஜெயசூர்யா தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இதையும் படிக்க: நானும் தில்லி கேபிடல்ஸும் ஐபிஎல் கோப்பையை வென்றதில்லை, ஒன்றிணைந்து வெல்வோம்: கே.எல்.ராகுல்

42 ரன்களில் ஆட்டமிழப்பு

தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 191 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இலங்கை அணி அதன் முதல் இன்னிங்ஸில் விளையாடியது. தென்னாப்பிரிக்க அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இலங்கை அணி 42 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணியில் 5 வீரர்கள் (தினேஷ் சண்டிமால், குசல் மெண்டிஸ், பிரபாத் ஜெயசூர்யா, விஸ்வா ஃபெர்னாண்டோ, அஷிதா ஃபெர்னாண்டோ) டக் அவுட் ஆகினர். அதிகபட்சமாக கமிந்து மெண்டிஸ் 13 ரன்கள் எடுத்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி ஆட்டமிழந்த மிகவும் குறைந்தபட்ச ஸ்கோர் இதுவாகும்.

தென்னாப்பிரிக்கா தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய மார்கோ யான்சென் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். ஜெரால்டு கோட்ஸீ 2 விக்கெட்டுகளையும், ககிசோ ரபாடா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

இதையும் படிக்க: விராட் கோலிக்காக ஆர்சிபிக்கு ஆதரவளிக்கிறேன்: ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர்!

வலுவான நிலையில் தென்னாப்பிரிக்கா

தென்னாப்பிரிக்க அணி 150-க்கும் அதிகமான ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடத் தொடங்கியது. இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் தென்னாப்பிரிக்க அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்கள் எடுத்துள்ளது. அய்டன் மார்க்ரம் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 17 ரன்களுடனும், கேப்டன் டெம்பா பவுமா 24 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

தென்னாப்பிரிக்க அணி இலங்கையைக் காட்டிலும் 281 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *